உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கு வழங்க இலவச மரக்கன்று தயார்

விவசாயிகளுக்கு வழங்க இலவச மரக்கன்று தயார்

மரக்காணம்,: திண்டிவனம், மரக்காணம் பகுதி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:திண்டிவனம் அடுத்த எறையானுாரில் உள்ள வனத்துறையில் இந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க தேக்கு, மகாகனி, வேம்பு, புங்கன், புளி, நீர்மருது உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகள் மரக்காணம், திண்டிவனத்தில் வனத்துறை நாற்றங்காலில் தயார் நிலையில் உள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ் இலவசமாக விவசாயிகளுக்கு நட்டு தரப்படும். மேலும், பசுமை தமிழக திட்டத்தில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.பருவமழை தொடங்கும் நிலையில் உள்ள காரணத்தினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய ஆதார், பட்டா, சிட்டா, வங்கி புத்தக நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் திண்டிவனம் வனச்சரக அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.விவசாய நிலங்களை தணிக்கை செய்து நிலங்களுக்கு உகந்த மரக்கன்றுகள் வழங்கப்படும்.இவ்வாற செய்திக்குறிப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை