உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

மயிலம் : மயிலம் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் பொது மருத்துவ முகாம் நடந்தது.மயிலம் ஊராட்சி மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் தலைமை தாங்கினர். மயிலம் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் தேன்மொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் வரவேற்றனர். துணைத் தலைவர் ஜெயப்பிரியா ஜெயச்சந்திரன், ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் கர்ப்பிணிகள், குழந்தை என 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மயிலம் அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மாத்திரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை