| ADDED : ஜூலை 04, 2024 10:06 PM
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை பள்ளிகளில் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அவலுார்பேட்டை அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ராஜவேலாயுதம், ஐயப்பன், தலைமை ஆசிரியர்கள் (பொறுப்பு) கலாவதி, தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் மகாராஜன், ஆலோசகர் ஏழுமலை, ஓய்வு ஆசிரியர்கள் சிதம்பரநாதன், உமாபதி, முருகன், ஞானசம்பந்தன், சுகாதார ஆய்வாளர் முருகன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.