உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்ணாடி கூண்டு பால பணி; நெடுஞ்சாலைத்துறை குழு ஆய்வு

கண்ணாடி கூண்டு பால பணி; நெடுஞ்சாலைத்துறை குழு ஆய்வு

விழுப்புரம் : கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலத்திற்கான வடிவமைப்பு பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதியாக ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு மெட்டல் ஸ்கேப் நிறுவனத்தின் மூலம் கண்ணாடி கூண்டு பாலத்திற்கான ஆர்ச் பீம்கள் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை விழுப்புரம் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை