உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா

அரசு பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா

விழுப்புரம் : விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் மண்டல அளவிலான ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லுாரியில், இந்தாண்டு அண்ணா பல்கலை., மண்டல அளவிலான விளையாட்டு விழா நடந்தது. அண்ணா பல்கலை., உறுப்பு கல்லுாரிகள் கலந்துகொண்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அண்ணா பல்கலை கழக அரசு பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த மண்டல அளவிலா தடகள போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கும், ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார். விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், உடற் கல்வி இயக்குநர் தனபால் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை