உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி அலுவலர் மர்ம சாவு;போலீசார் விசாரணை

அரசு பள்ளி அலுவலர் மர்ம சாவு;போலீசார் விசாரணை

திருவெண்ணெய் நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள அரசு பள்ளி அலுவலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 56; , திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இளநிலை உதவியாளர். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலை வெகுநேரமாகியும் பெருமாள் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது உறவினர்கள் மாலை 6:30 மணியளவில் பள்ளிக்கு சென்று பார்த்தபோது பெருமாள் இருக்கையில் அமர்ந்தபடியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து, அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ