உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பசுந்தீவனம் பயிரிடும் திட்டம் விண்ணப்பம் வரவேற்பு

பசுந்தீவனம் பயிரிடும் திட்டம் விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையில் விவசாயிகள் பசுந்தீவன பயிரை பயிரிடும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு 3,000 ரூபாய் வீதம் அரசு மானியத்தோடு, விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் விருப்பமுள்ள விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.சொந்தமாக கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள், அவர்களின் சொந்த நிலத்தில் பாசன வசதியோடு (குறைந்த பட்சம் 0.5 ஏக்கர்) பராமரிக்கும், வளர்க்கப்படும் தோட்ட பயிர்கள், பழத்தோட்டங்களில் இடையே ஊடு பயிராக தீவணப்பயிர் வளர்க்கவும் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளுக்கு வளர்க்க விருப்பமுள்ளோர் தேர்வு செய்யப்படுவர்.நீர்பாசன வசதி, அடுத்தடுத்து பயிரிட பாசன வசதி உடைய ஒரு நபருக்கு, ஒரு எக்டர் வரை வழங்கலாம். பசுமையான தீவன பயிர்கள் வளர்க்க விரும்பும் விவசாயிகள், இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர் ஆவர். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் குறிப்பாக 30 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியனருக்கான விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி தீவன பயிர்களை நிலமற்ற கால்நடை வைத்திருக்கும் கால்நடை உரிமையாளருக்கு விற்க விரும்பும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் அதே கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை