உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பசுமை பந்தல் அமைப்பு

பசுமை பந்தல் அமைப்பு

திண்டிவனம் : கோடை வெயிலை கருத்தில் கொண்டு, நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் பசுமை பந்தல் மற்றும் கூடுதல் தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.கத்திரி வெயில் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலில் அவதிப்படும் மக்களை பாதுகாக்கும் வகையில், திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில் மேம்பால பஸ் நிலையத்தின் இரு பகுதிகள், பழைய பஸ் நிலையம், நகராட்சி அலுவலகம் எதிரில், மரக்காணம் பஸ் நிலைய நிறுத்தம் ஆகிய இடங்களில் மினி வாட்டர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் திறந்த வெளியாக இருப்பதால், பயணிகளின் நலனை கருதி அங்கு நகராட்சி சார்பில், பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ