காணையில் வீடு புகுந்து கொள்ளை; ஒரே இரவில் 2 வீடுகளில் கைவரிசை
விழுப்புரம் : காணையில், ஒரே இரவில் 2 வீடுகளில் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த காணை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சம்மாங்கி, 67; இவர், விழுப்புரத்தில் வசிக்கும் மகள் வீட்டிற்கு கடந்த 10 தினங்களுக்கு முன் சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காணைக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 5,000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. மற்றொரு சம்பவம்
அதே தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார், 44; இவர், நேற்று முன்தினம், விழுப்புரத்தில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார். அவரது தாய் விஜயலட்சுமி மட்டும், தனியாக இருந்ததால், எதிர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, தனது வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11 ஆயிரத்து 500 ரூபாய் கொள்ளை போனதுதெரியவந்தது.இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.