உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அமைச்சர் மீதான வழக்கு விசாரணை குவாரி ஆவணங்கள் ஒப்படைப்பு

அமைச்சர் மீதான வழக்கு விசாரணை குவாரி ஆவணங்கள் ஒப்படைப்பு

விழுப்புரம், : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு தொடர்பான ஆர்.டி.ஓ., அலுவலக ஆவணங்கள் நேற்று கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ம் ஆண்ட வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில், வழக்கு தொடர்பான விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலக ஆவணங்களின் நகல் கேட்டு கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் பூத்துறை குவாரி ஆவணங்களை நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை