உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களுக்கு அதிக விலை; வேளாண் விற்பனைக்குழு தகவல்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களுக்கு அதிக விலை; வேளாண் விற்பனைக்குழு தகவல்

விழுப்புரம் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நடைபெறும் மின்னணு ஏலத்தில், அதிக விலை கிடைப்பதை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் வேளாண் விற்பனைக்குழு செயலா ளர் சந்துரு செய்திக்குறிப்பு:அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் இந்த நிதியாண்டில் 26,335 விவசாயிகளிடமிருந்து, 1,59,218 மூட்டைகள் ஏலத்தில் எடுத்து, 63 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில், 12,736 மெட்ரிக் டன் அளவிலான வேளாண் விளை பொருட்களின் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.இங்கு, தினசரி உளுந்து, நெல், கம்பு, ராகி, வேர்க்கடலை, எள், மக்காச்சோளம், பச்சைப்பயறு, பனிப்பயிர், தட்டைபயிர், திணை மற்றும் கொப்பரை உள்ளிட்ட பல வகையான வேளாண் விளைபொருட்கள், விழுப்புரம் மட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும், விவசாயிகள் கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்று பயனடைந்து வருகின்றனர்.விளைபொருட்களுக்கு, சரியான எடை மற்றும் உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் பணப்பட் டுவாடா செய்யப்படுகிறது.எனவே, மின்னணு ஏலத்தின் மூலம் விற்பனை செய்து, அதிகம் லாபம் அடைந்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும், தகவலுக்கு, விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 8925902922 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை