உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.ம.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு 

அ.ம.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு 

வானுார், மே 6-விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில் எதிரில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சியை, மாநில எம்.ஜி.ஆர்.,மன்ற துணைச் செயலாளர் விஸ்வநாதன் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி, துவக்கி வைத்தார். தொடர்ந்து, தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, மோர், இளநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.வானுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி செயலாளர் அறிவழகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செம்மல், கிளைச் செயலாளர் புருேஷாத்தம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் குணா, மனோகர், ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், மேலவை பிரதிநிதி வேலு, விக்ரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி