உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவல் துறை வாகனங்கள் விழுப்புரத்தில் எஸ்.பி., ஆய்வு 

காவல் துறை வாகனங்கள் விழுப்புரத்தில் எஸ்.பி., ஆய்வு 

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல் துறை வாகனங்களுக்கான மாதாந்திர ஆய்வு நேற்று நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக மைதானத்தில், விழுப்புரம் மாவட்ட போலீசாரின் வாகனங்களுக்கான ஆய்வு நடந்தது. எஸ்.பி., தீபக்சிவாச், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஜோசப் ஆகியோர், மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறைக்கு சொந்தமான நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், காவல் நிலைய ரோந்து மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.காவல்துறை வாகனங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் நிலை குறித்தும் அவர்கள் பரிசோதனை செய்து, ஆய்வு மேற்கொண்டனர். இதில், மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை