உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊசுட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

ஊசுட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வானுார் : தமிழக எல்லையில் அமைந்துள்ள ஊசுட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு நடத்தினார்.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் ஊசுட்டேரி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசு, ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. 800 எக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, புதுச்சேரி பகுதியில் 390 எக்டேரும், தமிழக பகுதியில் 410 எக்டேர் பரப்பிலும் உள்ளது.தமிழக அரசும், ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இந்த ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்ணில் பூகோல ரீதியாக பின்னிப் பிணைந்துள்ளது. இந்த ஏரியையொட்டி, ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழக எல்லையில் உள்ள ஊசுட்டேரியையொட்டி, நேற்று விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி திடீர் ஆய்வு நடத்தினார்.அப்போது, ஊசுட்டேரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார்.வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் வனத்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ