உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல் 

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல் 

திண்டிவனம் : திண்டிவனத்தில் 14வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் அறிவுறுத்தலின் பேரில், நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் வடபழனி தலைமை தாங்கினார். கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அட்டையை ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் பாலசுந்தரம், நகர செயலாளர் தீனதயாளன் வழங்கினர்.நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, நகர ஜெ., பேரவை செயலாளர் ரூபன்ராஜ், எம்.ஜி.ஆர்., மன்றம் ரவி, முன்னாள் கவுன்சிலர் ஞானவேல், நகர பாசறை செயலாளர் கார்த்திக், கிளைச் செயலாளர் காளிமுத்து, நிர்வாகிகள் ஏழுமலை, மகேஷ், மகளிர் அணி மீனா, நாகமணி, வழக்கறிஞர் செந்தில், அன்பு, கார்த்திக், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை