உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்

கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்

மயிலம்: மயிலத்தில் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மயிலம் பி.டி.ஓ., ரவி வரவேற்றார்.மயிலம் ஒன்றிய பகுதிகளில் கூரை வீட்டில் வசிக்கும் பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் 238 பேருக்கு 8 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதல் கட்டமாக பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி, உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்சாரி, மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், செழியன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், கண்ணன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜா, மயிலம் ஒன்றிய பொறியாளர் அப்துல் ரஹீம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை