உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

வானுார் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., அறிவுறுத்தலின் பேரில் வானுார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெமிலி ஊராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் முருகன் ஆகியோர், அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், அணி செயலாளர்கள் வீரப்பன், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் ஜெய்பீம், மேலவை பிரதிநிதிகள் லோகநாதன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மனோகரன், தட்சிணா, கிளை செயலாளர்கள் உமாபதி, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை