உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் 16ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் 16ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை 16ம் தேதி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.வேலை வாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை 16ம் தேதி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில், 18 வயது முதல் 35 வயது வரையிலான படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம். இதில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம்.முகாமில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தேவையான தகுதி வாய்ந்த 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை