உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நொளம்பூரில் கலச விளக்கு பூஜை

நொளம்பூரில் கலச விளக்கு பூஜை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நொளம்பூரில் கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜை நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் கிராம மக்கள் நலம் பெற வேண்டி கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜை நடந்தது. மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மணிவாசகம், திரிபுரசுந்தரி, முன்னாள் கவுன்சிலர் சுகுமார், பாலசுப்பிரமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் . வேள்வி முடிவில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க விழுப்புரம் கிழக்குப் பகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ