உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 10ம் வகுப்பு தேர்வில் கென்னடி பள்ளி சாதனை

10ம் வகுப்பு தேர்வில் கென்னடி பள்ளி சாதனை

திண்டிவனம்: ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி 487, பிரியதர்ஷினி 485, சந்தியா 484 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். 470 மதிப்பெண்ணுக்கு மேல் 12 பேர், 450க்கு மேல் 21 பேர், 400க்கு மேல் 41 மாணவர்களும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.மேலும், கணிதத்தில் 5 பேர், அறிவியலில் 3 பேர், சமூக அறிவியலில் 2 பேர் 100க்கு100 எடுத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா, செயலாளர் சந்தோஷ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.இதுகுறித்து பள்ளி தாளாளர் சண்முகம் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இதற்காக ஒத்துழைப்பு அளிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை