உள்ளூர் செய்திகள்

கிருத்திகை வழிபாடு

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் குன்றின் மேல் அமைந்துள்ள ஆறுபடையப்பன் கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத ஆறுபடையப்பன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.ஒதியத்துார், திருமல்ராயபுரம், மேல்வாலை, கீழ்வாலை, கண்டாச்சிபுரம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி