உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டாச்சிபுரத்தில் குருபூஜை விழா

கண்டாச்சிபுரத்தில் குருபூஜை விழா

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் கண் கொடுத்த விநாயகர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது.சித்திரை மாத சதய நட்சத்திரத்தையொட்டி நடந்த குருபூஜையில், நேற்று மதியம் திருநாவுக்கரசருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின், திருநாவுக்கரசர் சிலை கோவிலில் வலம் வந்தது.முன்னதாக கண்கொடுத்த விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏறபாடுகளை தர்மகர்த்தா நாராயணசாமி, உபயதாரர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி