உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய சட்ட திருத்தங்களை கண்டித்து விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் மறியல்

புதிய சட்ட திருத்தங்களை கண்டித்து விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் மறியல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில், முப்பெரும் சட்ட மாற்றத்துக்கு எதிராக மறியல் போராட்டம் நடந்தது.விழுப்புரம் கோர்ட் எதிரே நேற்று காலை 11:30 மணிக்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். தலைவர் பாலமுருகன், துணைச் செயலாளர்கள் ரஞ்சித்பாபு, தமிழரசன், துணைத் தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.மாநில துணைச் செயலாளர் சங்கரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேச பெருமாள், பிரபு, அலாவுதீன், அழகுவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு மாற்றம் செய்தும், அதனை சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து, பல்வேறு எதிர்ப்புகளுடையே, வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளதை கண்டித்து பேசினர்.தொடர்ந்து திடீரென கோர்ட் வளாகம் எதிரே, திருச்சி சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனைவரையும் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ