| ADDED : ஜூலை 27, 2024 02:06 AM
விழுப்புரம்: மரக்காணம் அருகே சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சீத்தாராமன், 34; சாராய வியாபாரியான இவர், கடந்த மாதம் 22ம் தேதி, வண்டிபாளையம் குளக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, போலீசார் கைது சிறையில் அடைத்தனர். இவரது கள்ளச்சாராய தொடர் குற்ற சம்பவத்தை தடுக்கும் வகையில், எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி, உத்தரவின் பேரில், மரக்காணம் போலீசார், சீத்தாராமனை சாராய தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று கைது, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.