உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லோக்சபா ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய கிடங்கில் வைப்பு

லோக்சபா ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய கிடங்கில் வைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதியில் பயன்படுத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் வைக்கும் பணி நடந்தது.விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்., 19 ம் தேதி நடந்தது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்த தேர்தலில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி., பேட் இயந்திரங்கள் அனைத்தும், நேற்று வாகனம் மூலம் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.அங்கு பலத்த பாதுகாப்போடு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டது. இந்த பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி, தனி தாசில்தார் (தேர்தல்) கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை