உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் திருடிய நபர் கைது

பைக் திருடிய நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வடிவேல், 48; இவர், கடந்த 13ம் தேதி இரவு, தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரியவந்தது. பைக்கினை, விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த வேதமாணிக்கம் மகன் டேவிட்,46; என்பவர் திருடிய தெரியவந்தது.புகாரின் பேரில், வளவனுார் போலீசார், பைக்கினை பறிமுதல் செய்து, டேவிட் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ