உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அமைச்சர், எம்.எல்.ஏ., தீவிர ஓட்டு சேகரிப்பு

அமைச்சர், எம்.எல்.ஏ., தீவிர ஓட்டு சேகரிப்பு

விழுப்புரம் : காணை ஒன்றியம், கல்பட்டு கிராமத்தில், தி.மு.க.,வினர் ஓட்டு சேகரித்தனர்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் மகேஷ் கல்பட்டு கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். மோகன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சிற்றரசு, காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ