உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு

செஞ்சி : ஆலம்பூண்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா நடந்தது.அரசின் 15 துறைகள் மூலம் 44 சேவை திட்டங்களை பெற மக்கள் நேரடியாக மனு செய்து 30 நாட்களில் பயனடைய தமிழக அரசு, மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்ட துவக்க விழா செஞ்சி ஒன்றியத்தில் ஆலம்பூண்டியில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன், சப் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் முகுந்தன் வரவேற்றார்.சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திட்டத்தை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ., சீத்தாலட்சுமி, ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், புவனா செந்தில்குமார், கேமல், டிலைட், ஊராட்சி தலைவர்கள் ஆலம்பூண்டி முத்தம்மாள் சேகர், சோ.குப்பம் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ