உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே மேம்பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல நடவடிக்கை

ரயில்வே மேம்பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல நடவடிக்கை

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் செல்ல நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணிகளுக்காக புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை