உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மண் குவியல்

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மண் குவியல்

விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை டிவைடர் அருகே விபத்தை ஏற்படுத்தும், மண் குவியலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை மைய பகுதியில் சிமென்ட் கான்கிரீட்டில் ஆன தடுப்பு கட்டை கட்டப்பட்டுள்ளது.சவிதா தியேட்டர் சந்திப்பு பகுதியில் இருந்து, கோலியனுார் கூட்ரோடு வரை 5 கி.மீ., தொலைவில் உள்ள இந்த தடுப்பு கட்டை ஓரம் இருபுறமும் மண் குவியல் அதிகரித்துள்ளது. இதனால், கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் துாசு விழுந்து பாதிப்பிற்குள்ளாகின்றனர்.மேலும், இருசக்கர வாகன சக்கரம் குவிந்துள்ள மண்ணில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், சாலை நடுவே உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ