உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு

விழுப்புரம், : வாணியம்பாளையம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு நடந்தது.இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசித்து வழிபடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு, கடந்த பிப்ரவரி 29ம் தேதி காலை தொடங்கி மாலை வரை நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசித்து வழிபாடு தொடங்கியது.தொடர்ந்து, நேற்று காலையிலிருந்து மதியம் வரை, நாலாயிர திவ்ய பிரபந்த பூர்த்தி நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பாகவதர்கள், மக்கள் திவ்ய பிரபந்தம் படித்து, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மூலவர் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின், சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை