பைக் மோதி முதியவர் பலி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பைக் மோதி இறந்தார்.திண்டிவனம் வீராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 75; இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள திண்டிவனம் - சென்னை புறவழிச்சாலையை கடக்க முயன்றார்.அப்போது சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி பல்சர் பைக்கில் சென்றவர், செல்வராஜ் மீது மோதினார்.இந்த விபத்தில், படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கில் வந்த திருவண்ணாமலை, குமரன் நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் தினேஷ், 19; விருத்தாசலம் பெரியார் நகர் ரமேஷ் மகன் சபரி நிவாஸ், 20; சீர்காழி, வடகால் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பிரேம்குமார், 19; ஆகிய மூன்று பேரும் படுகசாயமடைந்தனர். 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.