உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் மோதி மூதாட்டி பலி

ரயில் மோதி மூதாட்டி பலி

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடந்த மூதாட்டி ரயில் மோதி இறந்தார்.விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் கந்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி ராதா, 90; இவர், சித்தேரிக்கரையில் உள்ள தனது மகள் லட்சுமி வீட்டிற்கு சென்றவர், நேற்று மாலை இந்திரா நகர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விழுப்புரம் ரயில்வே போலீசார், ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி