செஞ்சி : செஞ்சியில் தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சியிலும், ஒன்றிய தி.மு.க., சார்பில் அப்பம்பட்டிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. செஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து காந்தி பஜார் வழியாக மவுன ஊர்வலம் சென்று கூட்ரோட்டில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் தலைமையில் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் கார்த்தி முன்னிலை, வகித்தார். இதே போல் அப்பம்பட்டு பஸ் நிறுத்தத்திலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை சேர்மன் ஜெயபாலன், பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், கவுன்சிலர்கள் சங்கர், ஜான்பாஷா, சீனுவாசன், சிவக்குமார், மோகன், ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், தாட்சாயணி, தொண்டரணி பாஷா, இளைஞரணி பழனி, செந்தில், கோட்டீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி சர்தார், அய்யாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.