உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி 

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி 

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பருதிவேலன், 48; இவர், நேற்று காலை தனது தந்தை மகாலிங்கத்தை, 76; விழுப்புரம் நோக்கி பைக்கில் அழைத்துச் சென்றார்.விழுப்புரம் மேல்தெரு அருகே வந்த போது, முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றார். அப்போது, டிராக்டர் உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பருதிவேலன், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி இறந்தார். படுகாயமடைந்த மகாலிங்கம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ