உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரும்பை கோவில் உண்டியல் திறப்பு

இரும்பை கோவில் உண்டியல் திறப்பு

வானுார்: இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலில், காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டன.வானுார் அடுத்த திருவக்கரையில் வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.இந்த உண்டியல் ஒவ்வொரு ஆண்டும் மூன்று அல்லது நான்கு முறை திறந்து எண்ணப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டுள்ளது.கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், மொத்தம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 223 ரூபாய் பொது மக்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை