உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டமானடி கங்கையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

கண்டமானடி கங்கையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

விழுப்புரம் : கண்டமானடி ஸ்ரீ கங்கையம்மன் கோவிலில் 9 நாள்கள் சித்திரை திருவிழா நடந்தது.இக்கோவிலில், இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் நிறைவு நாள் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் கங்கையம்மனுக்கும், சன்னதியில் உள்ள விநாயகர், முருகர் சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன், வீரன் சுவாமியுடன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை