உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை ராணுவம் கொடி அணிவகுப்பு 

துணை ராணுவம் கொடி அணிவகுப்பு 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. தொகுதியில் உள்ள 275 ஓட்டுச் சாவடிகளில் பதற்றமான ஓட்டுச்சாவடி கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.அதனையொட்டி, நேற்று காலை விக்கிரவாண்டி, வி.சாத்தனுார் பகுதியில் விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் துணை ராணுவத்தினர் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அணிவகுப்பில் பங்கேற்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ