உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

விழுப்புரம்: புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.புதுச்சேரியில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு விழுப்புரத்திற்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. காலை 8:50 மணிக்கு விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை அருகே சென்றபோது ரயில் இன்ஜின் பழுதாகி நடு வழியில் நின்றது.இதனால், காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேல்மருவத்துாரில் இருந்த புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் மயிலத்தில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப்பின், விழுப்புரத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு சென்று, சகாதேவன்பேட்டை அருகே நின்ற புதுச்சேரி பயணிகள் ரயிலை விழுப்புரத்திற்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து, விழுப்புரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் தாமதமாக புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை