உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி நடந்து சென்றவர் பலி

பைக் மோதி நடந்து சென்றவர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் இறந்தார்.விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி,64; இவரது நண்பர் பாலய்யா, 50; இருவரும், கடந்த 25ம் தேதி காலை, மாம்பழப்பட்டு அருகே சாலையோரம் பேசிக்கொண்டு நடந்து சென்றனர். அப்போது, அந்த சாலை வழியாக பின்னால் வந்த பைக் அவர்கள் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட கலியமூர்த்தி, சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த பாலய்யா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, கலியமூர்த்தி மகன் வீரமணி கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, பைக்கை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய, ஒட்டன்காடுவெட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் லட்சுமணன்,45; மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி