உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் ரவிந்திரன், 29; இவர், 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 24ம் தேதி பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார்.இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ரவிந்திரன் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ