உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கபடி போட்டி முன்விரோத தகராறு 6 பேர் மீது போலீசார் வழக்கு

கபடி போட்டி முன்விரோத தகராறு 6 பேர் மீது போலீசார் வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சேர்ந்தனூர் கிராமத்தில், கடந்த 25ம் தேதி, சேர்ந்தனூர் அணிக்கும், அருகே உள்ள வி.அகரம் கிராம இளைஞர் அணிக்கும் இடையே கபடி போட்டி நடந்துள்ளது. இப்போட்டியில், வி.அகரம் கிராம இளைஞர்கள் தோல்வி அடைந்துவிட்டனர். அப்போது, இரு அணி வீரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்விரோதமாக கொண்ட வி.அகரம் பகுதியை சேர்ந்த மோகன் மகன் முகஷே்,19; ஜெயக்குமார், 20; செல்வன் மகன் ஜெயராஜ், 20; ஆகியோர், சேர்ந்தனூரை சேர்ந்த முத்துராமன் மகன் கவிதாஸ், 21; முருகையன் மகன் முத்துகுமார், 27; ஆகியோரை திட்டி தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல், சேர்ந்தனூரைச் சேர்ந்த கோகுல்தாஸ், 20; கவிதாஸ், 21; முத்துகுமார், 21; ஆகியோர் தாக்கியதில், வி.அகரத்தை சேர்ந்த முகேஷ், ஜெயராஜ், ஜெய் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.இதுகுறித்து, இரு தரப்பு புகாரின் பேரில், வளவனூர் போலீசார் இரு தரப்பை சேர்ந்த கோகுல்தாஸ், கவிதாஸ், முத்துகுமார், முகேஷ், ஜெயகுமார், ஜெயராஜ் ஆகிய 6 பேர் மீதும், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்