உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி எதிரொலி புதுச்சேரி-தமிழக எல்லையில் போலீஸ் சோதனை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி எதிரொலி புதுச்சேரி-தமிழக எல்லையில் போலீஸ் சோதனை

வானுார்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரி எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 55 பேர் இறந்தனர். ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுச்சேரியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால், பலர் இறந்ததாக கூறப்படுகிறது.இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.இதையொட்டி, புதுச்சேரி - தமிழக எல்லையான கோரிமேடு சந்திப்பு பகுதியில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் மேற்பார்வையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் புதுச்சேரியில் இருந்து வெளியே வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை