உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

விழுப்புரம், : விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.பின், நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:30 மணிக்கு, நந்தி பகவான் ஆலயம் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.இதே போல், விழுப்புரம் கைலாசநாதர் கோவிலிலும், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர், மகாராஜபுரம் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி