விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி பாமக., வேட்பாளர் அன்புமணி வாக்காளர்களிடம் நான் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் .வாய்ப்பு தாருங்கள் என கூறி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம் வினாயகபுரம், அதனுார், சிறுவாலை, செம்மேடு, சி்த்தேரி,வெள்ளேரிப்பட்டு உள்ளிட்ட34 கிராமங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ua4wr6h0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாவட்ட தலைவர்கள் புகழேந்தி, தங்கஜோதி ,மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல் ,மணிமாறன்,பா.ஜ.க., மாவட்ட தலைவர் கலிவரதன் ஆகியோர் முன்னிலைவகித்தனர் . பிரச்சாரத்தின் போது, பா.ம.க., வேட்பாளர் அன்புமணி வாக்காளர்களிடம் பேசும் போது,'' கடந்த 2016 தேர்தலில் நின்று தோற்றுள்ளேன். பொதுமக்களுக்கு உழைத்திட கட்சியில் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளனர் . நான் உங்களுக்கு உழைக்க காத்திருக்கின்றேன்.வாய்ப்பு தாருங்கள்'' என்று பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா,மாவட்ட தலைவர் காமராஜ்,துணை தலைவர் முருகன், அதனுார் பாலா, சரவணபவன் , ஒன்றிய செயலாளர்கள் மோகன், மேல்காரணை முருகன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.