உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் சோதனை

விழுப்புரம்: சுதந்திர தினத்தை யொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவை யொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில், நேற்று காலை 9.00 மணி முதல் ரயில்வே போலீசார் தீவிர சோதனை செய்தனர். ரயில்வே இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம், தனிப்பிரிவு ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார், ரயில்களில் உள்ள பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டனர். தொடர்ந்து இந்த கருவி மூலம், ரயில்வே பிளாட்பாரம், தண்டவாள பகுதி, டிக்கெட் கவுன்ட்டர், இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பார்சல் அலுவலகங்களில் தீவிரமாக சோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ