உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேரணியில் ரயில்வே மேம்பாலம் சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

பேரணியில் ரயில்வே மேம்பாலம் சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை

மயிலம் : மயிலம் சட்டசபை தொகுதியில் உள்ள பேரணி கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்' என சிவக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்து பேசினார்.சட்டசபையில் அவர் பேசுகையில், 'மயிலம் அடுத்த பேரணி கிராமத்தின் வழியாக பெரியதச்சூர், நேமூர், கெடார், வேட்டவலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும், சாலை வழியாக 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்ற முக்கியமான வழித்தடம் ஆகும்.விபத்து காலங்களில் விழுப்புரம் செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புறவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையின் குறுக்கே தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்வே பாதை உள்ளது.இதனால் இங்கு ரயில்வே கேட் போடுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.இதற்கு பதில் அளித்த துறை அமைச்சர் வேலு, 'ரயில்வே துறையிலிருந்து தடையில்லா சான்று பெற்றவுடன் இதற்கான பணிகள் துவங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ