உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே சுரங்கப்பாதை எம்.எல்.ஏ., ஆய்வு

ரயில்வே சுரங்கப்பாதை எம்.எல்.ஏ., ஆய்வு

மயிலம்: சித்தணி ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.மயிலம் அடுத்த சித்தணி கிராமம் வழியாக தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து ரயில்கள் செல்கின்றன. இப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.இப்பணி நீண்ட நாட்களாக நிறைவடையாமல் இழுபறியில் இருப்பதால், கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில்,மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் பணியை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், தற்போது ஆடிப்பட்டத்திற்கு நாற்று விடவும், விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சி பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாத நிலை உள்ளது.செண்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தற்போது நடந்து வருவதால் சித்தணி கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது. கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம் பகுதியில் மின் இணைப்பில் இருந்து கிராமத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., மின் மின்சாரம், ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்