உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஜராஜேஸ்வரி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ராஜராஜேஸ்வரி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 24 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி 12வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் ரோகன் 500க்கு 489, மாணவி ஹரிணி 456, நிவேதா 450 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளி நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார், பள்ளி தாளாளர் பத்மாவதி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.பள்ளி நிர்வாகி பாலசுப்ரமணியம், கல்வி அதிகாரி ஸ்ரீவித்யா, மூத்த முதல்வர் கலைவாணி, முதல்வர் நாராயணன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி