உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரங்கநாதர் கோவில் தேர் திருவிழா

ரங்கநாதர் கோவில் தேர் திருவிழா

செஞ்சி, : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் பிரம்மேற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது.நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருளினார். 8:30 மணிக்கு மகா தீபாராதனையுடன் திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது.அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், தேர்திருப்பணி குழு முன்னாள் தலைவர் குணசேகர், ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி மற்றும் பிரம்மோற்சவ விழா உபயதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி